Enable Javscript for better performance
"பாஜகவின் பினாமி அரசாக  தமிழக அரசு செயல்படுகிறது'- Dinamani

சுடச்சுட

    

    பாஜகவின் பினாமி அரசாக தமிழக அரசு செயல்படுவதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.    
    சென்னையிலிருந்து புதன்கிழமை மதுரை வந்த அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியது: காவிரி மேலாண்மை வாரியம் அமைத்து நமக்கு உரிய நீரை பெற்றுக் கொடுக்கவில்லை.
    குறைந்த பட்சம் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த கர்நாடக அரசை மத்திய அரசு கூறியிருக்க வேண்டும் . அவர்களுக்கு கர்நாடக தேர்தல்தான் முக்கியமாக உள்ளது. தேசியக் கட்சிகள் என  பேசிக்கொண்டு கர்நாடகா, கேரளா என வரும்போது மாநில கட்சிகளாக  மாறிவிடுகின்றன.  
    தமிழகத்தில் இத்தனை ஆண்டுகளாக இல்லாமல் தாமிரவருணி புஷ்கர விழா நடைபெற்றது. 40 ஆண்டுகளுக்கு பின் அத்திவரதர் வருகிறார். பாஜக கோயில் விழாக்களை கையில் எடுத்துக்கொண்டு கட்சியை பரப்புகிறது. தற்போதைய தமிழக அரசு அவற்றை எதிர்க்காது. பாஜகவின்  பினாமியாகதான் இங்கு ஆட்சி  நடக்கிறது. 
    சேலம்- சென்னை 8 வழிச்சாலை திட்டத்தை ஜப்பான், பிரேசில் போன்ற வெளிநாடுகளைப் போல விளைநிலங்களை அழிக்காமல் தூண்களைக் கட்டி, பாலம் அமைத்து, யாருக்கும் பாதிப்பில்லாதவாறு சாலை  அமைக்கலாம். 
    கேரளாவில்  தேசிய நெடுஞ்சாலை இல்லை. நிலங்கள் அழிந்துவிடும் என்பதற்காக இதுவரை அங்கு அமைக்கப்படவில்லை என்றார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai