Enable Javscript for better performance
"புராதன சின்னங்களை மாணவர்கள் பாதுகாக்க வேண்டும்'- Dinamani

சுடச்சுட

    

    மதுரையைச் சுற்றியுள்ள புராதன சின்னங்களை மாணவர்கள் பாதுகாக்க  வேண்டும் என மதுரை தொல்லியல் துறை மண்டல துணை இயக்குநர் சக்திவேல் தெரிவித்தார் . 
    பெருங்குடி சரசுவதி நாராயணன் கல்லூரியின் வரலாற்றுத்துறை சங்கத் தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது. கல்லூரி முதல்வர் மு. கண்ணன் தலைமை வகித்தார்.  
    மதுரை தொல்லியல் மண்டல துணை இயக்குநர் சக்திவேல் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, பேசியது :  இந்தியாவிலுள்ள ஒவ்வொரு கிராமத்திற்கும் ஒரு வரலாறு உண்டு.  கிராம கோயில்கள் மிகவும் தொன்மையானவை.  நம் நாட்டிலுள்ள ஒவ்வொரு புராதன சின்னங்களுக்கும் நீண்ட வரலாறு உண்டு. மாணவர்கள் புராதன சின்னங்களை பாதுகாப்பதில் சமூக பொறுப்புடன் செயல்பட வேண்டும். மதுரை நகரைச்சுற்றி ஏராளமான வரலாற்றுச் சின்னங்கள் உள்ளன.  திருப்பரங்குன்றம் மலை, யானை மலை மற்றும் அழகர் கோவிலைச்சுற்றி ஏராளமான வரலாற்று உண்மைகள் புதைந்துள்ளன. மதுரை நகருக்கு ஒவ்வொரு நாளும் ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட வெளி மாநில மற்றும் வெளி நாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர்.  இந்தி மற்றும் பிரெஞ்சு மொழி தெரிந்திருந்தால் சுற்றுலா வழிகாட்டியாக செயல்பட ஒரு நாளைக்கு குறைந்தது ரூ. 7 ஆயிரம் சம்பளம் கிடைக்கும் என்றார். 
    முன்னதாக வரலாற்றுத்துறைத் தலைவர் ரவிச்சந்திரன் வரவேற்றார். மூன்றாம் ஆண்டு வரலாற்றுத்துறை மாணவி பானுபிரியா நன்றி கூறினார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai