Enable Javscript for better performance
மகாத்மா காந்திக்கு சிறப்பு அஞ்சல் உறை- Dinamani

சுடச்சுட

    

    மதுரை தலைமை தபால் அலுவலகத்தில் ஜூலை 26 ஆம் தேதி மகாத்மா காந்தியடிகளின் மதுரை விஜயத்தை சிறப்பிக்கும் வகையில் அஞ்சல் உறை வெளியிடப்பட உள்ளது என மதுரை முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர்   ஜவஹர்ராஜ் தெரிவித்துள்ளார்.
    இந்திய அஞ்சல்துறை மகாத்மா காந்தியடிகளின் 150 ஆவது பிறந்த ஆண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, காந்தியடிகளின் தமிழக விஜயம் தொடர்பாக தொகுக்கப்பட்ட 11 சிறப்பு அஞ்சல் உறைகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 2 ஆம் தேதி வரை காந்தி யாத்ரா சிறப்பு அஞ்சல் உறைகள் என்ற தலைப்பில் வெளியிடப்பட உள்ளன. மதுரையில் விவசாயிகளைக் கண்டு, தன்னுடைய ஆடையை அரை ஆடையாக மாற்றிக் கொண்ட நிகழ்வு நடந்தது. 
    இதனைக் கருப்பொருளாகக் கொண்டு H​A​LF NA​K​ED FA​K​IR  என்ற சிறப்பு அஞ்சல் உறை மதுரை தலைமை தபால் அலுவலத்தில் ஜூலை 26 ஆம் தேதி காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai