Enable Javscript for better performance
மடிக்கணினி வழங்கக் கோரி ஆட்சியர் அலுவலகம் முற்றுகை- Dinamani

சுடச்சுட

    

    விலையில்லா மடிக்கணினி வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை பள்ளி மாணவர்கள் புதன்கிழமை முற்றுகையிட்டனர்.
       மதுரை மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மேல்நிலை வகுப்பு மாணவர்களுக்கு தற்போது விலையில்லா மடிக்கணினி வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில்,  இதற்கு முந்தைய 2 கல்வியாண்டுகளில் படித்த மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கப்படாததால் ஆங்காங்கே மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
      இதற்கிடையே, மதுரை தல்லாகுளம் பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் சுமார் 70 பேர் ஆட்சியர் அலுவலகத்தை புதன்கிழமை முற்றுகையிட்டனர். சுயநிதிப் பிரிவில் சேர்ந்துள்ளதால், தங்களுக்கு மடிக்கணினி வழங்க மறுப்பதாகப் புகார் தெரிவித்தனர்.  பின்னர் மடிக்கணினி கோரி மாணவர்கள் மனு அளித்தனர்.


     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai