Enable Javscript for better performance
மாநகராட்சி குடிநீர்த் தொட்டி இயக்குபவர் பணியிடை நீக்கம்- Dinamani

சுடச்சுட

    

    மாநகராட்சி குடிநீர்த் தொட்டி இயக்குபவர் பணியிடை நீக்கம்

    By DIN  |   Published on : 25th July 2019 09:11 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    குடிநீர் விநியோகப் பணியைச் சரிவர செய்யாத குடிநீர்த் தொட்டி இயக்குபவரை பணியிடை நீக்கம் செய்து மாநகராட்சி ஆணையர் ச.விசாகன் புதன்கிழமை உத்தரவிட்டுள்ளார்.
     மதுரை மாநகராட்சியில் தற்போது 4 நாள்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஒவ்வொரு நாளுக்குரிய விநியோகப் பகுதிகள் மற்றும் நேரம் அறிவிக்கப்பட்டு சுழற்சி முறையில் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. 
     இந்நிலையில் மதுரை தெற்கு கிருஷ்ணன் கோயில் பகுதி, மஞ்சனக்காரத் தெரு, திருமலை நாயக்கர் மகால் பகுதி, ஜடாமுனி கோயில் தெரு ஆகிய பகுதிகளுக்கு புதன்கிழமை மாலை 3 முதல் 6 மணி வரை குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும். இப் பகுதிக்குரிய குடிநீர்த் தொட்டி இயக்குபவர் (ஆபரேட்டர்) முத்துலிங்கம், குறிப்பிட்ட நேரத்தில் பணியில் இல்லாத காரணத்தால் ஜான்சிராணி பூங்கா மேல்நிலைத் தொட்டி வால்வு திறக்கப்படவில்லை. இதனால் விநியோகப் பகுதிகளுக்கு குறிப்பிட்ட நேரத்தில் குடிநீர் வழங்க முடியவில்லை. அதையடுத்து பணி நேரத்தின்போது பணியில் இல்லாத காரணத்தால் குடிநீர்த் தொட்டி இயக்கும் முத்துலிங்கத்தை பணியிடை நீக்கம் செய்து மாநகராட்சி ஆணையர் ச.விசாகன் உத்தரவிட்டார். குடிநீர் விநியோகம் செய்வதில் களப் பணியாளர்கள் கவனக்குறைவாகச் செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai