Enable Javscript for better performance
மாநகராட்சி சிறப்பு முகாமில்106 விண்ணப்பங்கள்- Dinamani

சுடச்சுட

    

    மதுரை மாநகராட்சி சார்பில் நடைபெற்ற சிறப்பு முகாமில் 106 விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
     மதுரை மாநகராட்சிப் பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு வரைபட அனுமதி, பிறப்பு-இறப்புச் சான்று,  குடிநீர், பாதாளச் சாக்கடை இணைப்புக்கான விண்ணப்பங்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கும் வகையில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
     இதன்படி  பொன்மேனி, அரசரடி,  பெத்தானியாபுரம்,  கற்பக நகர்,  கோ.புதூர், லூர்து நகர்,  ரிசர்வ் லைன், சின்ன அனுப்பானடி, அனுப்பானடி, சிந்தாமணி, சுப்பிரமணியபுரம், சோலையழகுபுரம், ஜெய்ஹிந்துபுரம் ஆகிய பகுதிகளுக்கான சிறப்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
     இதில் வரைபட அனுமதி, வரிவிதிப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுடன் 106 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இவை பரிசீலிக்கப்பட்டு தகுதியுள்ள விண்ணப்பங்களுக்கு வியாழக்கிழமை (ஜூலை 25) உரிய உத்தரவுகள் வழங்கப்படும்.
    இந்த முகாமில் உதவி ஆணையர்கள் பழனிசாமி, பிரேம்குமார், முருகேசபாண்டியன், இ.விஜயா, செயற்பொறியாளர்கள் ராஜேந்திரன், சந்திரசேகர், சேகர் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai