Enable Javscript for better performance
மாநில ஹாக்கி: சென்னை அணிகள் ஆதிக்கம்: இன்று காலிறுதிப் போட்டி- Dinamani

சுடச்சுட

    

    மாநில ஹாக்கி: சென்னை அணிகள் ஆதிக்கம்: இன்று காலிறுதிப் போட்டி

    By DIN  |   Published on : 25th July 2019 09:06 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மதுரையில் நடைபெறும் மாநில அளவிலான ஹாக்கிப் போட்டியின் நான்காம் நாள் ஆட்டங்களில் சென்னை அணிகள் வெற்றி பெற்றுள்ளன. 
    ரிசர்வ்லைன் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் மதுரை ரேஸ்கோர்ஸ் எம்ஜிஆர் விளையாட்டரங்கில் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. நான்காம் நாளாக புதன்கிழமை நடைபெற்ற முதல் ஆட்டத்தில் தமிழக காவல் துறை சென்னை அணி 3-2 என்ற கோல் கணக்கில் மதுரை ரிசர்வ் லைன் ஸ்போர்ட்ஸ் கிளப் அணியை வீழ்த்தியது. ஆட்டத்தின் முதலாவது பாதி நேரத்தில் 1-1 என்ற கோல் கணக்கில் இரு அணிகளும் சமநிலையில் இருந்தன.
    விறுவிறுப்பாக நடந்த அடுத்த பாதி நேரத்தில் இரு அணிகளும் அடுத்தடுத்து கோல் போட மீண்டும் 2-2 என்ற சமநிலைக்கு வந்தன. பரபரப்பாக நடந்த ஆட்டத்தின் 56 ஆவது நிமிடத்தில் மீண்டும் ஒரு கோல் அடித்து சென்னை அணி வெற்றி பெற்றது.
     மற்றொரு ஆட்டத்தில் கோவில்பட்டி விளையாட்டு விடுதி அணி 5-2 என்ற கோல் கணக்கில் சென்னை தபால்துறை ஹாக்கி கிளப் அணியை வென்றது. ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே கோவில்பட்டி அணி ஆதிக்கத்தில் இருந்தது. 2-0 என்ற நிலையில்  இருந்த அந்த அணி ஆட்டநேர இறுதியில் 5-2 என்ற கோல் கணக்கில் வென்றது.
      மாலையில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் சென்னை மாநில கணக்காயர் கிளப் அணி 2-0 என்ற கோல் கணக்கில் மதுரை ஜி.கே.மோட்டார்ஸ் ஹாக்கி கிளப் அணியை வீழ்த்தியது. இன்னொரு ஆட்டத்தில் சென்னை இந்திய விளையாட்டு ஆணைய (சாய்) அணி 4-0 என்ற கோல் கணக்கில் சென்னை மாநகரக் காவல் அணியை வென்றது.
     இன்று காலிறுதி ஆட்டங்கள்: முதல் சுற்று ஆட்டங்கள் நாக்அவுட் முறையில் நடைபெற்ற நிலையில் காலிறுதி போட்டி வியாழக்கிழமை நடைபெறுகிறது. ஜிஎஸ்டி மற்றும் மத்திய கலால் துறை அணி - கோவில்பட்டி விளையாட்டு விடுதி அணி, இந்தியன் வங்கி (சென்னை) - தமிழக காவல் துறை அணி (சென்னை), ஐசிஎப் சென்னை - சாய் சென்னை, தெற்கு ரயில்வே - மாநிலக் கணக்காயர் அணிகள் மோதுகின்றன.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai