Enable Javscript for better performance
மாற்றுத்திறனாளிகளுக்கான உலக பேட்மிண்டன்: தங்கம் வென்ற மாணவிக்கு மதுரை விமான நிலையத்தில் வரவேற்பு- Dinamani

சுடச்சுட

    

    மாற்றுத்திறனாளிகளுக்கான உலக பேட்மிண்டன்: தங்கம் வென்ற மாணவிக்கு மதுரை விமான நிலையத்தில் வரவேற்பு

    By DIN  |   Published on : 25th July 2019 09:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சீனாவில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான  உலக பேட்மிண்டன் போட்டியில் தங்கம் வென்ற மாணவி ஜெர்லின்அனிகாவிற்கு மதுரை விமான நிலையத்தில் புதன்கிழமை உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. 
    மதுரை வில்லாபுரம் பகுதியை சேர்ந்தவர் ஜெயரட்சகன், லீமாரோஸ்லின் தம்பதியரின் மகள் ஜெர்லின்அனிகா(15). இவர் வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி இவர் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கிறார். சிறு வயது முதலே பேட்மிட்டன் விளையாட்டில் பயிற்சி பெற்று வந்துள்ளார். 
    இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு துருக்கியில் நடைபெற்ற (டியுஆர்எப்)ஒலிம்பிக்கில் 5 ஆவது இடமும், கடந்த 2018 ஆம் ஆண்டு மலேசியாவில் நடைபெற்ற ஆசியா பசிபிக் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் 2 வெள்ளிப் பதக்கங்களும் 1 வெண்கலப் பதக்கமும் வென்றுள்ளார். 
    தற்போது சீனாவின் தைபேயில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிக்கான 2019ஆம் ஆண்டிற்கான உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் 1 தங்கப் பதக்கமும், 2 வெள்ளிப் பதக்கங்களும், 1 வெண்கலப் பதக்கமும் பெற்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளார். சீனாவில் இருந்து புதுதில்லி வழியாக சென்னை வந்த அவர் புதன்கிழமை மாலை மதுரை விமான நிலையம் வந்தார். 
    அவருக்கு விமானநிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள், மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்கள், உறவினர்கள், மற்றும் நண்பர்கள் உற்சாகமான வரவேற்பளித்தனர்.  தொடர்ந்து மத்திய தொழில் பாதுகாப்பு படை மைதானத்தில் மத்திய தொழில் பாதுகாப்புபடை துணை கமாண்டோ மொகந்தி தலைமையில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது. இதில் மாணவி ஜெர்லின் அனிகா மரக்கன்றுகளை நட்டார். தொடர்ந்து ஜெர்லின் அனிகாவின் தந்தை ஜெயரட்சகன் செய்தியாளர்களிடம் கூறியது: தமிழக முதல்வர் விளையாட்டிற்காக எவ்வளவோ செய்துள்ளார். இப்பொழுது கூட விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு திட்டத்தில் 2% சதவீதத்தில் இருந்து 3% சதவீதமாக உயர்த்தி உள்ளனர். அது மிகவும் மகிழ்ச்சியான விஷயம்.  கடைசியாக நடந்த சட்டப்பேரவையில் முதல்வர் சாதாரணமாக விளையாடுபவர்கள் உலக அரங்கில் வெற்றி பெற்றால் என்ன பரிசு வாங்குகிறார்களோ, அதே அங்கீகாரம் மாற்றுத் திறனாளிகளுக்கும் வழங்கப்படும் என 110 விதியின் கீழ் வலியுறுத்தியுள்ளார்.  அது ஜெர்லின் அனிகா போன்ற மற்ற குழந்தைகளுக்கும் விளையாட்டு வீரர்களுக்கும் உந்துதலாக இருக்கும் என நம்புகிறோம். ஊனம் என்பது குறை இல்லை என்பதை ஜெர்லின் அனிகா இதன் மூலம் நிரூபித்துள்ளார் என்றார்.  


     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai