Enable Javscript for better performance
மேலூர் உச்சி மாகாளியம்மன் கோயில் உற்சவம்: கடவுள் வேடமணிந்து பக்தர்கள் ஊர்வலம்- Dinamani

சுடச்சுட

    

    மேலூர் உச்சி மாகாளியம்மன் கோயில் உற்சவம்: கடவுள் வேடமணிந்து பக்தர்கள் ஊர்வலம்

    By DIN  |   Published on : 25th July 2019 09:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மேலூர் பேருந்துநிலையம் அருகிலுள்ள  உச்சி மாகாளியம்மன் கோயில் ஆடி உற்சவத்தையொட்டி பல்வேறு கடவுள் உருவத்தில் வேடமணிந்த  பக்தர்கள் ஊர்வலத்தில் பங்கேற்றனர்.
       உச்சி மாகாளியம்மன்கோயில் உற்சவம் செவ்வாய்க்கிழமை கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. காலையில் ஏராளமானோர் பால்குடம் எடுத்து வந்தனர். பிற்பகல் அன்னதானம் நடைபெற்றது. இரவு சக்திகரகம், திருவிளக்கு பூஜைகளில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். புதன்கிழமை காலை பொங்கல் வைபவம் நடைபெற்றது. 
        மாலை முளைப்பாரி ஊர்வலத்தில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். ஊர்வலத்தை தொடர்ந்து இரவு அம்மன் பூ பல்லக்கில் எழுந்தருளினார். பல்வேறு கடவுள்கள்  வேடமணிந்த ஆண்களும் பெண்களும் ஊர்வலத்தில் பங்கேற்றனர். அக்னிச் சட்டி எடுத்தும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.


     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai