Enable Javscript for better performance
ரயிலுக்கு அடியில் தவறி விழுந்த பெண் மீட்பு- Dinamani

சுடச்சுட

    

    மதுரை ரயில் நிலையத்தில், ரயிலில் இருந்து இறங்கும் போது தவறி விழுந்து ரயிலுக்கு அடியில் சிக்கிய பெண் பயணி புதன்கிழமை மீட்கப்பட்டார். 
    சென்னை- திருவனந்தபுரம் செல்லும் அனந்தபுரி விரைவு ரயில் புதன்கிழமை காலை மதுரை ரயில் நிலையம் வந்தது. இதில் மதுரையைச் சேர்ந்த விஜயபூர்ணிமா(49) வந்தார். 
    அயர்ந்து தூங்கியதால் மதுரை ரயில் நிலையத்தில் ரயில் நின்றபோது இறங்காமல், ரயில் புறப்படும் நேரத்தில் இறங்கியுள்ளார். 
    அப்போது தவறி விழுந்து ரயிலுக்கு அடியில் சிக்கிக் கொண்டார். நடைமேடையில் இருந்தவர்கள் அவர் சிக்கிக் கொண்டதைப் பார்த்து ரயிலை நிறுத்தும்படி கூச்சல்போட்டனர். 
    உடனடியாக அபாயச் சங்கிலி இழுக்கப்பட்டு ரயில் நிறுத்தப்பட்டது. ரயில்வே போலீஸார், தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். 
    ரயில்வே பாதுகாப்புப் படையினர், ரயில்வே போலீஸார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சேர்ந்து ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு விஜய பூர்ணிமாவை மீட்டனர். காயமடைந்த அவர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai