Enable Javscript for better performance
லாட்டரி, புகையிலை பொருள்கள் விற்ற 3 பேர் கைது- Dinamani

சுடச்சுட

    

    மதுரையில் தடை செய்யப்பட்ட லாட்டரி மற்றும் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த 3 பேரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
    மதுரை தெப்பக்குளம் பகுதியில் போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அபோது ஐராவதநல்லூர் பகுதியில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நின்றவரை பிடித்து போலீஸார் சோதனை செய்தனர். அவரிடமிருந்து வெளி மாநில லாட்டரி சீட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அனுப்பானடி பகுதியைச் சேர்ந்த ஞானமூர்த்தி(53) என்பதும், சட்டவிரோதமாக லாட்டரி விற்பனைச் செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து, காவல் உதவி ஆய்வாளர் கார்த்திக் அளித்த புகாரின் பேரில் தெப்பக்குளம் போலீஸார் செவ்வாய்க்கிழமை வழக்குப்பதிந்து ஞானமூர்த்தியை கைது செய்து, ரூ.12 ஆயிரம் மதிப்புள்ள லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.
    மற்றொரு சம்பவத்தில், மதுரை தெப்பக்குளம், கீழச் சந்தைப்பேட்டை  காமராஜர் சாலையில், சந்தேகப்படுபடி நின்றவரை பிடித்து போலீஸார் விசாரித்தனர். சந்தப்பேட்டையைச் சேர்ந்த பாஸ்கரன்(55) என்பதும், தடைசெய்யப்பட்ட புகையிலை பொருள்களை விற்பனை செய்ததும் தெரியவந்தது.
     இதையடுத்து, காவல் உதவி ஆய்வாளர் குமாரி அளித்த புகாரின் பேரில் தெப்பக்குளம் போலீஸார் செவ்வாய்க்கிழமை வழக்குப்பதிவு செய்து பாஸ்கரனை கைது செய்தனர்.
    இதேபோன்று, மாட்டுதாவணி மத்திய காய்கறிச் சந்தையில் போலீஸார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஐராவதநல்லூர் பகுதியைச் சேர்ந்த தனசேகரன்(49) என்பவர் புகையிலை பொருள்கள் விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, காவல் உதவி ஆய்வாளர் கண்ணன் அளித்தப் புகாரின் பேரில் அண்ணாநகர் போலீஸார் தனசேகரனை கைது செய்தனர். மேலும், 984 புகையிலை பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai