மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கு இலவச மருத்துவ மதிப்பீட்டு முகாம்: ஜூலை 31-இல் தொடக்கம்

மதுரை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு இலவச மருத்துவ மதிப்பீட்டு முகாம் ஜூலை 31-ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு இலவச மருத்துவ மதிப்பீட்டு முகாம் ஜூலை 31-ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மூலம் மாற்றுத்திறன் கொண்ட சிறப்பு குழந்தைகளுக்கான சிறப்பு இலவச மதிப்பீட்டு முகாம் 15 வட்டார வள மையங்களிலும் தனித்தனியாக நடைபெறுகிறது. முகாமில் 6 வயது முதல் 18 வயதுக்குள்பட்ட மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் பங்கேற்று பயன்பெறலாம். முகாமில் பங்கேற்கும் குழந்தைகளுக்கு உணவு, குடிநீர், போக்குவரத்துக் கட்டணம் வழங்கப்படும். மேலும் குழந்தைகளுக்கு மருத்துவரின் ஆலோசனையின்பேரில் குழந்தைகளின் தன்மைக்கேற்ப மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தின் மூலமாக தேசிய அடையாள அட்டை, அரசுப் பேருந்து இலவச பயண அட்டை வழங்க ஏற்பாடு செய்தல், மாதந்தோறும் வழங்கப்படும் மானியம் உள்ளிட்ட இதர சலுகைகளும் வழங்கப்பட உள்ளது. மேலும் மருத்துவ பரிசோதனை அடிப்படையில் தமிழக முதல்வர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இலவச அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளுதல், இலவச உதவி உபகரணங்கள் போன்றவையும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. முகாமில் பங்கேற்போர் ஆதார் அட்டை நகல், நான்கு புகைப்படங்கள், தேசிய அடையாள அட்டை ஆகியவற்றை கொண்டு வர வேண்டும். அத்துடன் தாங்கள் ஏற்கெனவே வைத்துள்ள மருத்துவ அறிக்கையையும் கொண்டு வர வேண்டும். 
மருத்துவ முகாம், மதுரை தெற்கு வட்டார வளமையத்துக்கு ஜூலை 31-ஆம் தேதி காமராஜர் சாலை ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறுகிறது. தொடர்பு எண் 97888-58763. திருப்பரங்குன்றம் பகுதிக்கு ஆகஸ்ட் 1ஆம் தேதி, திருப்பரங்குன்றம் வட்டார வளமையம், அவனியாபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி, தொடர்புக்கு 97888-58760. தா.வாடிப்பட்டி ஆகஸ்ட் 2-ஆம் தேதி, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, தொடர்புக்கு 97888-58762. கொட்டாம்பட்டி, ஆகஸ்ட் 5-ஆம் தேதி, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, தொடர்புக்கு 97888-58755. செல்லம்பட்டி ஆகஸ்ட் 6-ஆம் தேதி வட்டார வளமையம் அரசு உயர்நிலைப்பள்ளி தொடர்புக்கு 97888-58753. தே.கல்லுப்பட்டிக்கு ஆகஸ்ட் ஆகஸ்ட் 7-ஆம் தேதி, அரசு மேல்நிலைப்பள்ளி, தொடர்புக்கு 97888-58758. சேடப்பட்டிக்கு ஆகஸ்ட் 8ஆம் தேதி, அரசு மேல்நிலைப்பள்ளி, தொடர்புக்கு 97888-58759. திருமங்கலம் பகுதிக்கு ஆகஸ்ட் 9-ஆம் தேதி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, தொடர்புக்கு 97888-58759. மதுரை கிழக்கு பகுதிக்கு ஆகஸ்ட் 13-ஆம் தேதி, உலகனேரி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, தொடர்புக்கு 97888-58750.
மதுரை மேற்கு பகுதிக்கு, ஆகஸ்ட் 14-ஆம் தேதி, பிபிகுளம் உழவர் சந்தை எதிரேயுள்ள மாநகராட்சி பாண்டியன் நெடுஞ்செழியன் மேல்நிலைப்பள்ளி, தொடர்புக்கு 97888-58751.
மதுரை வடக்கு பகுதிக்கு ஆகஸ்ட் 16-ஆம் தேதி, மதுரை சேதுபதி மேல்நிலைப்பள்ளி, தொடர்புக்கு 97888-58751, அலங்காநல்லூர் பகுதிக்கு ஆகஸ்ட் 19-ஆம் தேதி, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, தொடர்புக்கு 97888-58752. 
 மேலூர் பகுதிக்கு ஆகஸ்ட் 20-ஆம் தேதி, மேலூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, தொடர்புக்கு 97888-58756. உசிலம்பட்டி பகுதிக்கு ஆகஸ்ட் 21-ஆம் தேதி, அரசு மேல்நிலைப்பள்ளி, தொடர்புக்கு 97888-58761. கள்ளிக்குடி பகுதிக்கு ஆகஸ்ட் 22-ஆம் தேதி, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, 97888-58754 ஆகிய பகுதிகளில் நடைபெறுகிறது.
எனவே மாற்றுத்திறன் கொண்ட எந்த குழந்தையும் விடுபடாதவாறு அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில், விழிப்புணர்வு பிரசாரமும் செய்யப்படுகிறது. இதன்மூலம் மதுரை மாவட்டத்தில் சிறப்புத்திறன் கொண்ட 3 ஆயிரம் குழந்தைகள் பயனடைய உள்ளனர் என்று மதுரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com