முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை
அரசுப் பேருந்து நடத்துநர் மீது தாக்குதல்
By DIN | Published On : 30th July 2019 08:49 AM | Last Updated : 30th July 2019 08:49 AM | அ+அ அ- |

மதுரையில் ஓடும் பேருந்தில் நடத்துநரை கத்தியால் தாக்கிவிட்டு தப்பிச்சென்ற மாணவர்கள் இருவரை போலீஸார் தேடி வருகின்றனர்.
மதுரை பெரியார்பேருந்து நிலையத்தில் இருந்து ராஜாக்கூருக்கு அரசுப்பேருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு திங்கள்கிழமை மாலை 5 மணியளவில் சென்றது. பேருந்தில் இருந்த மாணவர்கள் இருவரிடம் நடத்துநர் கணேசன் பயணச்சீட்டு கேட்டுள்ளார். அப்போது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் பேருந்து சீமான் நகர் அருகே வந்தபோது, மாணவர்கள் வைத்திருந்த கத்தியால் நடத்துநரை தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இதில் நடத்துநருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. இதைப் பார்த்த சக பயணிகள் மாணவர்கள் இருவரையும் பிடிக்க முயன்றபோது ஓடும் பேருந்தில் இருந்து இறங்கி மாணவர்கள் தப்பிச் சென்றனர். இதில் காயமடைந்த நடத்துநர் கணேசன் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சம்பவம் குறித்த புகாரின்பேரில் அண்ணாநகர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.