முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை
சிறுதானிய உணவுகள் தயாரிக்க பயிற்சி
By DIN | Published On : 30th July 2019 08:41 AM | Last Updated : 30th July 2019 08:41 AM | அ+அ அ- |

மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் சிறுதானிய உணவுகள் தயாரிக்கும் பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை (ஆக.2) நடைபெறுகிறது.
இதுகுறித்து அருங்காட்சியக செயலர் மா.பா. குருசாமி வெளியிட்டுள்ள செய்தி:
மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் சிறுதானிய உணவுகள், மதிப்பு கூட்டப்பட்ட பொருள்கள் தயாரிப்பு பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 முதல் மணி மாலை 4.30 வரை நடைபெறும். உழவன் உணவகத்தைச் சேர்ந்த ஜானகி சுப்பிரமணியம் பயிற்சி வகுப்புகளை நடத்துகிறார்.
பயிற்சியின் நிறைவில் சான்றிதழ் வழங்கப்படும். இதில் கலந்து கொள்ள விரும்புவோர் காந்தி நினைவு அருங்காட்சியக கல்வி அலுவலரை நேரிலோ அல்லது 98657-91420 என்ற எண்ணிலோ தொடர்பு கொண்டு தங்களது பெயர்களைப் பதிவு செய்து கொள்ளலாம் என்றார்.