முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை
திருமங்கலத்தில் "டாஸ்மாக் ' பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
By DIN | Published On : 30th July 2019 08:41 AM | Last Updated : 30th July 2019 08:41 AM | அ+அ அ- |

திருமங்கலத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி "டாஸ்மாக்' பணியாளர்கள் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருமங்கலம் ராஜாஜி சிலை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு பணியாளர்கள் சங்க மாவட்ட தலைவர் ராஜசேகர் தலைமை வகித்தார். செயலர் குருசாமி, பொருளாளர் அழகன்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில், கடைகளில் முறைகேடுகள் ஏதும் கண்டுபிடிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட மேலாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அந்தந்த மாவட்ட மேலாளர்களே கடைகளில் ஆய்வு செய்யவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். இதில், மாநில தலைவர் மரகதலிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.