முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை
புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூ. கையெழுத்து இயக்கம்
By DIN | Published On : 30th July 2019 08:49 AM | Last Updated : 30th July 2019 08:49 AM | அ+அ அ- |

புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து திருமங்கலம் அரசு பள்ளியில் மாணவ, மாணவியரிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கையெழுத்து இயக்கம் திங்கள்கிழமை நடைபெற்றது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் புதிய கல்விக் கொள்கையை திரும்பப் பெற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் 1 கோடி கையெழுத்து இயக்க போராட்டம் நடைபெற்று வருகிறது.
இதில் கல்வி அளிக்கும் பொறுப்பிலிருந்து அரசு விலகிக் கொள்வது. கல்வியை தனியாரிடம் விட்டு விடுவது. தாய்மொழிக் கல்விக்கு உத்தரவாதமில்லாமல், ஹிந்தியை திணிப்பது உள்ளிட்ட புதிய பல்வேறு பிரச்னைகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
திருமங்கலம் அரசு பள்ளி முன்பு அக் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜேந்திரன் தலைமையில் மாணவ, மாணவியரிடம் கையெழுத்து வாங்கினர். இதில் கட்சியினர் ஏராளமானோர் பங்கேற்றனர்.