தியாகராஜர் கல்லூரியில் சிறப்புச் சொற்பொழிவு
By DIN | Published On : 30th July 2019 08:50 AM | Last Updated : 30th July 2019 08:50 AM | அ+அ அ- |

மதுரை தியாகராஜர் கல்லூரியில் கருமுத்து தியாகராச செட்டியார் நினைவு அறக்கட்டளைச் சொற்பொழிவு திங்கள்கிழமை நடைபெற்றது.
விழாவில் பேராசிரியர் மு. அருணகிரி எழுதிய, மதுரைப் பதிற்றுப்பத்தந்தாதி உரைநூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. நூலாசிரியர் மு.அருணகிரி நூல் அறிமுகம் செய்தார். நூலின் முதற்படியை கல்லூரிச் செயலர் கருமுத்து க.தியாகராசன் பெற்றுக் கொண்டு பேசியது:
கருமுத்து தியாகராஜ செட்டியாரை நினைவு கூற வேண்டுமெனில் ஒவ்வொருவரும் திருவாசகத்தை படித்தாலே போதும் என்றார். கட்டுரைப் போட்டிக்கான முதல் பரிசு மதுரைக் கல்லூரியைச் சேர்ந்த ஜனனி, இரண்டாம் பரிசு பாத்திமா கல்லூரியைச் சேர்ந்த தாட்சாயினி, மூன்றாம் பரிசு தியாகராஜர் கல்லூரியைச் சேர்ந்த பாலமணிகண்டன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து பேராசிரியர் கி.சிவக்குமார் "இரண்டுமிலித்தனியனேன்' - திருச்சதகம் என்ற பொருளில் சிறப்புரை ஆற்றினார். முன்னதாக மதுரை காமராஜர் பல்கலைக் கழக தமிழ்புலத் தலைவர் ராமராஜ பாண்டியன் வரவேற்றார். கல்லூரி தமிழ்த் துறைத் தலைவர் இராம.மலர்விழி மங்கையர்க்கரசி நன்றி கூறினார்.