Enable Javscript for better performance
குற்றங்களை குறைக்க மதுரை மாநகர் முழுவதும் சிசிடிவி கேமரா: காவல் ஆணையர் தகவல்- Dinamani

சுடச்சுட

    

    குற்றங்களை குறைக்க மதுரை மாநகர் முழுவதும் சிசிடிவி கேமரா: காவல் ஆணையர் தகவல்

    By DIN  |   Published on : 01st June 2019 09:53 AM  |   அ+அ அ-   |    |  

    குற்றங்களைத் தடுக்க மதுரை மாநகர் முழுவதும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகிறது என மதுரை மாநகர் காவல் ஆணையர் எஸ்.டேவிட்சன் தேவாசீர்வாதம் கூறினார்.
     மதுரை அண்ணாநகர் காவல் சரகத்திற்கு உள்பட்ட வண்டியூரில், புதியதாக அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடியை வெள்ளிக்கிழமை திறந்து வைத்த அவர், செய்தியாளர்களிடம் கூறியது:  
    வண்டியூரில் திறக்கப்பட்டிருப்பது மாநகரின் 20 -ஆவது சோதனைச் சாவடியாகும். இந்த சோதனைச் சாவடி 24 மணி நேரமும் இயங்கும். இங்கு விரையில் சிசிடிவி கேமரா பொருத்தப்படும். இந்த சோதனைச் சாவடி மிகவும் முக்கியமானது. இந்த பகுதி வழியாக சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களிலிருந்து குற்றவாளிகள் ரகசியமாகவும், எளிதாகவும் மதுரைக்குள் நுழைந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சோதனைச் சாவடியில் 24 மணி நேரமும் வாகன சோதனைகள் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் மூலம் குற்றங்கள் குறைவதற்கான சூழல் ஏற்பட்டுள்ளது. மாநகரில் உள்ள 20 சோதனைச் சாவடிகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. விளக்குதூண் காவல் நிலையத்திற்கு உள்பட்ட 14 முக்கியச் சந்திப்புகளில் சிசிடிவி கேமராக்கள் முழுமையாக பொருத்தப்பட்டுள்ளன. அந்த கேமராவில் பதிவாகும் காட்சிகளை காவல்நிலையத்தில் இருந்தே பார்க்கக் கூடிய  வசதி செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் போக்குவரத்து விதிமீறல்கள், குற்றச்சம்பவங்ளை எளிதாக கண்டுபிடிக்கவும், குற்றங்களை தடுக்கவும் முடியும். இதே போன்று திருமங்கலம் காவல் நிலையத்திற்கு உள்பட்ட 15 முக்கிய சந்திப்புகளில் 60-க்கும் மேற்பட்ட கேமராக்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.
    மதுரை மாநகரில் நடைபெறும் கொலை, கொள்ளையில், கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் அதிக அளவில் ஈடுபடுகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் படிப்பை பாதியில் நிறுத்தியவர்கள் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதுகுறித்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நிகழ்ச்சிகள் நடத்தப்படும். மதுரை மாநகரில் குற்றச் சம்பவங்களை தடுக்கும் வகையில் மாநகர் முழுவதும் சிசிடிவி கேமராக்கள் பொருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
     சோதனைச் சாவடிகளுக்கு கூடுதல் காவலர்கள் நியமிக்கப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது என்றார். அண்ணாநகர் காவல் சரக உதவி ஆணையர் லில்லி கிரேஸ் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.


     

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    flipboard facebook twitter whatsapp