Enable Javscript for better performance
திருப்பரங்குன்றத்தில் 108 ஆம்புலன்ஸ் வாகனத்தை நிறுத்த இடமில்லாமல்  ஊழியர்கள் தவிப்பு- Dinamani

சுடச்சுட

    

    திருப்பரங்குன்றத்தில் 108 ஆம்புலன்ஸ் வாகனத்தை நிறுத்த இடமில்லாமல்  ஊழியர்கள் தவிப்பு

    By DIN  |   Published on : 01st June 2019 09:54 AM  |   அ+அ அ-   |    |  

    திருப்பரங்குன்றத்தில் 108 ஆம்புலன்ஸ் வாகனம் நிறுத்த இடம் இல்லாமல் ஊழியர்கள் தவிக்கின்றனர்.
    திருப்பரங்குன்றம், நிலையூர், திருநகர், தோப்பூர், தனக்கன்குளம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமம் மற்றும் நகர் பகுதிகளுக்கு உயிர்காக்கும் ஊர்தியாக 108 ஆம்புலன்ஸ்  உள்ளது. இதில் சுழற்சி அடிப்படையில் 4 ஊழியர்கள் 24 மணி நேரமும் பணிபுரிகின்றனர். அவசர மருத்துவ உதவிக்கு யாரேனும் அழைக்கும் சமயம் உடனடியாக சென்று அவர்களை மருத்துவமனையில் சேர்ப்பர். இந்த வாகனமானது திருப்பரங்குன்றம் கிரிவலப்பாதையில் உள்ள அரசு மருத்துவமனை வளாகத்திற்குள் கடந்த 8 ஆண்டுகளுக்கும் மேலாக நிறுத்தப்பட்டு வருகிறது. மேலும் அங்குள்ள சிறிய அளவிலான அறையை ஆம்புலன்ஸ் ஊழியர்கள் ஓய்வுவெடுக்கவும், உணவருந்தவும் பயன்படுத்தி வந்தனர். 
    அப்போதிருந்த திருப்பரங்குன்றம் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் பயன்படுத்திக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டது.  இந்நிலையில்  கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் திருப்பரங்குன்றம் ஆரம்ப சுகாதார நிலையம் அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது. 
    இந்நிலையில் கடந்த சில நாள்களுக்கு முன் 108 ஆம்புலன்ஸ் வாகனத்தை அரசு மருத்துவமனைக்குள் நிறுத்தக்கூடாது என்று மருத்துவமனை நிர்வாகம் கூறிவிட்டதாம். மேலும் ஊழியர்கள் உணவருந்த பயன்படுத்திய அறையையும் மருத்துவமனை நிர்வாகம் பூட்டிவிட்டு அவர்களை வெளியேற்றிவிட்டது. 
    இதனால் வாகனத்தை நிறுத்த இடம் இல்லாமல் ஊழியர்கள் தவித்து வருகின்றனர். மேலும் அவர்கள் இரவு நேரம் மற்றும் மதிய வேளைகளில் உணவருந்தவும், அமர்வதற்குகூட இடம் இல்லாமல் அவதியடைகின்றனர். எனவே அரசு மருத்துவமனையில் மீண்டும் 108 ஆம்புலன்ஸ் வாகனத்தை நிறுத்தவும், அவர்களுக்கான வசதிகளை செய்துதரவும் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊழியர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
     

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    flipboard facebook twitter whatsapp