Enable Javscript for better performance
"புகையிலை பயன்பாட்டை அறவே தவிர்க்க வேண்டும்'- Dinamani

சுடச்சுட

    

    "புகையிலை பயன்பாட்டை அறவே தவிர்க்க வேண்டும்'

    By DIN  |   Published on : 01st June 2019 09:54 AM  |   அ+அ அ-   |    |  

    புகையிலையின் தீமைகளை உணர்ந்து புகையிலை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என மதுரை மாவட்ட ஆட்சியர் எஸ்.நாகராஜன் கேட்டுக்கொண்டார்.
    உலக புகையிலை எதிர்ப்பு நாளையொட்டி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் நுரையீரல் மருத்துவப்பிரிவு சார்பில் புகையிலை பழக்கம் நிறுத்துதல் மையத்தை வெள்ளிக்கிழமை திறந்து வைத்து அவர் பேசியது: புகையிலை பொருள்களை பொதுமக்கள் பயன்படுத்துவதால் சுவாச நோய்கள், ஆஸ்துமா, காச நோய், இருதய ரத்தக்குழாய் நோய்கள், நுரையீரல் புற்றுநோய், குழந்தை பிறப்பு குறைபாடுகள் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் ஏற்படும். எனவே, பொதுமக்கள் புகையிலையினால் ஏற்படும் பாதிப்புகளை உணர்ந்து அவற்றை பயன்படுத்துவதை அறவே தவிர்க்க வேண்டும். குறிப்பாக இளைய தலைமுறையினர் அதிக அளவில் புகையிலைப் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி வருகிறது.
    இதுகுறித்து மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். புகையிலை பழக்கத்தினால், பயன்படுத்துபவர் மட்டுமின்றி குடும்பத்தினரும் பாதிப்படைவார்கள். அரசு ராஜாஜி மருத்துவமனையில் தொடங்கப்பட்டுள்ள புகையிலை பழக்கம் நிறுத்துதல் மையத்தின் மூலம் புகையிலை பழக்கம் உள்ளவர்கள் ஆலோசனைகள் பெற்று புகையிலை பழக்கத்தில் இருந்து விடுபட்டு ஆரோக்கியமாக வாழ வேண்டும் என தெரிவித்தார்.
    அரசு ராஜாஜி மருத்துவமனை மருத்துவக் கண்காணிப்பாளர் மருத்துவர்  ராஜா, நுரையீரல் மருத்துவத்துறை துணைத் தலைவர் மருத்துவர் பிரபாகரன், மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மைய மருத்துவர் அருள் சுந்தரேஸ்வரன், மருத்துவர் ஜென்சி உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர். மாலையில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுலவகத்தில் இருந்து விழிப்புணர்வு பேரணியை ஆட்சியர் தொடக்கி வைத்தார்.
     

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    flipboard facebook twitter whatsapp