அனைத்து வட்டங்களிலும் இன்று ஜமாபந்தி தொடக்கம்

மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களிலும் நிகழ் ஆண்டுக்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) புதன்கிழமை தொடங்குகிறது.

மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களிலும் நிகழ் ஆண்டுக்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) புதன்கிழமை தொடங்குகிறது.
அந்தந்த வட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களது குறைகள் தொடர்பான மனுக்கள், பட்டா மாறுதல், உட்பிரிவு ஆகியவற்றுக்கான மனுக்களை ஜமாபந்தி அலுவலரிடம் காலை 9 முதல் நேரில் அளிக்கலாம்.
ஜமாபந்தி நடத்தும் அலுவலர்,  நடைபெறும் தேதி விவரம் (சனி, ஞாயிறு, திங்கள்கிழமைகள் நீங்கலாக):  பேரையூர் - மாவட்ட ஆட்சியர்,  ஜூன் 12 முதல் 20 வரை (6 நாள்கள்). வாடிப்பட்டி - மாவட்ட வருவாய் அலுவலர், ஜூன் 12 முதல் 21 வரை (7 நாள்கள்). மதுரை வடக்கு - மதுரை கோட்டாட்சியர், ஜூன் 12 முதல் 14 வரை (3 நாள்கள்). கள்ளிக்குடி - திருமங்கலம் கோட்டாட்சியர், ஜூன் 12 முதல் 14 வரை (3 நாள்கள்). மதுரை தெற்கு - மேலூர் கோட்டாட்சியர், ஜூன் 12 முதல் 14 வரை (3 நாள்கள்). மதுரை மேற்கு - ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நிலம்), ஜூன் 12 முதல் 14 வரை (3 நாள்கள்).
திருமங்கலம் - தனித் துணை ஆட்சியர் (முத்திரைத்தாள்), ஜூன் 12 முதல் 18 வரை (4 நாள்கள்).  திருப்பரங்குன்றம் - மாவட்ட  ஆய்வுக் குழு அலுவலர், ஜூன் 12 முதல் 14 வரை (3 நாள்கள்). மதுரை கிழக்கு - தனித்துணை ஆட்சியர் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்), ஜூன் 12 முதல் 21 வரை (7 நாள்கள்). மேலூர் - மாவட்ட பிற்பட்டோர் நல அலுவலர், ஜூன் 12 முதல் 25 வரை (8 நாள்கள்). உசிலம்பட்டி - மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர், ஜூன் 12 முதல் 19 வரை (5 நாள்கள்).
ஆட்சியருக்குப் பதிலாக நேர்முக உதவியாளர்: பேரையூர் வட்டத்தின் ஜமாபந்தி அலுவலராக மாவட்ட ஆட்சியர் செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.சாந்தகுமார்,  ஆட்சியர் பொறுப்பில் உள்ளார். அவர் வாடிப்பட்டி வட்டத்துக்கான ஜமாபந்தி அலுவலராக இருக்கும் நிலையில், பேரையூரில் பங்கேற்க இயலாது.
 ஆகவே, ஜமாபந்தியின் முதல் நாளான புதன்கிழமை, பேரையூர் வட்டத்தில் தொடங்கி வைத்துவிட்டு வாடிப்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் ஜமாபந்தியில் ஆட்சியர் (பொறுப்பு) எஸ்.சாந்தகுமார் பங்கேற்பார். மேலும் பேரையூர் வட்டத்தில், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ராஜசேகர், ஜமாபந்தி அலுவலராக இருப்பார் எனவும் வருவாய்த் துறையினர் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com