சுடச்சுட

  

  குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணி

  By DIN  |   Published on : 13th June 2019 09:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


  தொழிலாளர் நலத்துறை சார்பில் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணி புதன்கிழமை நடைபெற்றது.
  குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தையொட்டி தொழிலாளர் நலத்துறை சார்பில் மதுரையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.  மதுரைக் கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு தொழிலாளர் நலத்துறை கூடுதல் ஆணையர் எம்.ராதாகிருஷ்ண பாண்டியன் தலைமை வகித்தார். இணை ஆணையர் பெ.வேல்முருகன், துணை ஆணையர் பெ.சுப்பிரமணியன், உதவி ஆணையர் ஜெ.காளிதாஸ் , மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் ஏ.கணேசன், விடியல் தொண்டு நிறுவனம் ஜிம் ஜேசுதாஸ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
  இதில்,  குழந்தைத் தொழிலா ளர் முறை எதிர்ப்பு தின விழிப்புணர்வு கட்டுரை, பேச்சு, ஓவியப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.  
  குழந்தை,  இளம் பருவத் தொழிலாளர் ஒழித்தல் மற்றும் முறைப்படுத்துதல் சட்டத்தை சிறப்பாக அமல்படுத்தியதற்காக தொழிலாளர் துறை உதவி ஆய்வாளர் 
  வெ.சரோஜா, "சைல்டு லைன்' இயக்குநர் ஆகியோருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. 
  பின்னர் அதைத் தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. மதுரைக் கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் தொடங்கிய இப்பேரணி,  கட்டபொம்மன் சிலை சந்திப்பு, நேதாஜி சாலை, மேலமாசி வீதி சந்திப்பு, டவுன்ஹால் சாலை, மேலவெளி வீதி வழியாக மீண்டும் பள்ளியை அடைந்தது. 
  இதில் மதுரைக் கல்லூரி மேல்நிலைப் பள்ளி, சேதுபதி, யூ.சி. மேல்நிலைப் பள்ளி, ஈ.வெ.ரா. மாநகராட்சி பள்ளி, மகபூப்பாளையம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி ஆகிய பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai