சுடச்சுட

  


  மதுரையில் கேட்பாரற்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 57 இருசக்கர வாகனங்களையும், 2 ஆட்டோக்களையும் போலீஸார் காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர்.
  மதுரை கே.புதூர், அண்ணாநகர் காவல் சரகத்திற்கு உள்பட்ட பகுதிகளில் 57 இருசக்கர வாகனங்கள், 2 ஆட்டோக்கள் நீண்ட நாள்களாக கேட்பாரற்று நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. 
  இந்த வாகனங்கள் குறித்து அந்தந்த பகுதிகளில் போலீஸார் விசாரித்ததில் யாரும் உரிமைகோரவில்லை.
  இதையடுத்து, கே.புதூர் காவல் சரகத்திற்கு உள்பட்ட பகுதிகளில் 8 இருசக்கர வாகனங்களையும், அண்ணாநகர் காவல் சரகத்திற்கு உள்பட்ட பகுதிகளில் 49 இருசக்கர வாகனங்கள் மற்றும் 2 ஆட்டோக்களையும் போலீஸார் திங்கள்கிழமை காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர்.
  இந்த வாகனங்களில் உள்ள எண்களை கொண்டு விசாரணை நடத்தி, உண்மையான பதிவு எண்களாக இருந்தால், அந்த வாகனங்கள் உரியவர்களிடம் விசாரணை நடத்தி ஒப்படைக்கப்படும். போலி எண்களாக இருந்தால் அந்த வாகனங்கள் குறித்து விசாரிக்கப்படும் என போலீஸார்  தெரிவித்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai