உசிலம்பட்டியில் மாணவ, மாணவிகளுக்கு யோகா பயிற்சி
By DIN | Published On : 18th June 2019 07:29 AM | Last Updated : 18th June 2019 07:29 AM | அ+அ அ- |

உசிலம்பட்டி நாடார் சரஸ்வதி மேல்நிலைப் பள்ளியில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு ஈஷா யோகா பயிற்சி மையம் சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு திங்கள்கிழமை யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் ரேச்சல் தலைமை வகித்தார். யோகா ஆசிரியர் சசி பயிற்சி அளித்தார். இதில் பல்வேறு ஆசனங்களைப் பற்றியும் மாணவர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.
இதில், 1,500 -க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயன் பெற்றனர். ஓவிய ஆசிரியர் வி.பிரதீப்குமார் நன்றி கூறினார்.
அதே போல் உசிலம்பட்டி டி.இ.எல்.சி. பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு அப்பள்ளி தலைமை ஆசிரியர் மார்கிரெட் கிரேசீலியா தலைமை வகித்தார். தன்னார்வலர்கள், மருத்துவர் ரவீந்திரன், எல்ஐசி.முரளிதுரை, பெரியகருப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஈஷா யோகா பயிற்சி ஆசிரியர் மாணவிகளுக்கு பயிற்சி அளித்தார். இதில் 1000-க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.