திருப்பரங்குன்றம் அருகே பகவத் கீதை சொற்பொழிவு
By DIN | Published On : 19th June 2019 07:32 AM | Last Updated : 19th June 2019 07:32 AM | அ+அ அ- |

திருப்பரங்குன்றத்தை அடுத்த விளாச்சேரி முனியாண்டி புரம் பகுதியில், பகவத் கீதை சொற்பொழிவு செவ்வாய்க்கிழமை தொடங்கி தொடர்ந்து 6 நாள்கள் நடைபெறுகிறது.
மதுரை சின்மயா மிஷன் மற்றும் மதுரை ஐயப்ப சேவா சங்கம் சார்பில் முனியாண்டிபுரம் ஐயப்பன் கோயிலில் தமிழில் விளக்கவுரையுடன் கூடிய பகவத் கீதை சொற்பொழிவு செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இந் நிகழ்ச்சியை ஐயப்ப சேவா சங்கத் தலைவர் பி.வி.ராகவ வாரியர் குத்துவிளக்கேற்றி தொடக்கி வைத்தார். சின்மயா மிஷன் ஆச்சார்யா சிவயோகானந்தா பகவத்கீதையை தமிழில் விளக்கம் அளித்து சொற்பொழிவாற்றுகிறார். இம்மாத 23 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை தினமும் நடைபெறும் இந்த சொற்பொழிவில் அனைவரும் பங்கேற்கலாம் என மதுரை ஐயப்பா சேவா சங்கத்தினர் தெரிவித்தனர்.