Enable Javscript for better performance
அயலகத் தமிழறிஞர்களுக்கான விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம்- Dinamani

சுடச்சுட

    

    அயலகத் தமிழறிஞர்களுக்கான விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம்

    By DIN  |   Published on : 21st June 2019 10:10 AM  |   அ+அ அ-   |    |  

    உலகத் தமிழ்ச் சங்கம் வழங்கும் அயலகத் தமிழர்களுக்கான விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    இதுகுறித்து உலகத் தமிழ்ச் சங்க இயக்குநர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி:  உலகத் தமிழ்ச் சங்கம் சார்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் தமிழக அரசால் அயலகத் தமிழறிஞர்களுக்கான விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இலக்கணம், இலக்கியம், மொழியியல் துறைகளில் சிறந்து விளங்கும் அயலகத் தமிழர்கள் 3 பேருக்கு உலகத் தமிழ்ச் சங்க விருதுகள் என்ற பெயரில் வழங்கப்படும்.  விருது பெறுபவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் ரொக்கம், தகுதியுரை ஆகியன வழங்கப்படும். 
     நிகழாண்டு (2019)  விருதுகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான விண்ணப்ப படிவத்தை உலகத் தமிழ்ச் சங்க இணையதளத்தில் (‌w‌w‌w.‌u‌t‌s‌m‌d‌u.‌o‌r‌g)    இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 
    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் ஜூலை 15 ஆம் தேதிக்குள் அஞ்சல் வழியாகவோ, மின்னஞ்சல் மூலமாகவோ வந்து சேர வேண்டும்.
    பூர்த்தி செய்த விண்ணப்பங்களை இயக்குநர், உலகத் தமிழ்ச் சங்கம், மருத்துவர் தங்கராஜ் சாலை, மதுரை - 625020 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். இது தொடர்பான விவரங்களுக்கு 
    உலகத் தமிழ்ச் சங்கத்தை 0452-2530766 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். மின்னஞ்சல் முகவரி: ‌u‌t‌s‌m‌d‌u1@‌g‌m​a‌i‌l.​c‌o‌m.
     


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    kattana sevai
    ->
    flipboard facebook twitter whatsapp