சுடச்சுட

    

    உசிலம்பட்டி அருகே அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கல்

    By DIN  |   Published on : 26th June 2019 07:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உசிலம்பட்டி அருகே எம்.கல்லுப்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
    இவ்விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் ச.சகாயதாஸ் தலைமை வகித்தார். பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் வி.மூக்கையா, எழுமலை ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சாம் பிரசாத்ராஜா, எழுமலை பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் வேளாங்கண்ணி, தாடையம்பட்டி அரசு கள்ளர் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் மாவட்ட கவுன்சிலர் பண்பாளன் அரசின் நலத் திட்ட உதவிகள் குறித்து விளக்கிப் பேசினார். விழாவில் உசிலம்பட்டி சட்டப் பேரவை உறுப்பினர் பா.நீதிபதி,  எழுமலை ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலை பள்ளி, எம்.கல்லுப்பட்டி மேல்நிலைப் பள்ளி, தாடையம்பட்டி அரசு கள்ளர் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள் மற்றும் 2018-19 ஆம் ஆண்டு படித்து முடித்த மாணவ, மாணவிகள் உள்ளிட்ட 1,761 பேருக்கு விலையில்லா மடிக்கணினிகளை வழங்கினார்.
    நிகழ்ச்சியை ஆசிரியர் ஆர்.மணிகண்டன் தொகுத்து வழங்கினார். முன்னதாக அதிமுக நகரச் செயலர் பூமா.ராஜா வரவேற்றார்.   எழுமலை பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் வி.முத்தையா நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai