சுடச்சுட

  

  மதுரையில் வீடு புகுந்து கத்தியை காட்டி 4 பவுன் நகைகள், ரூ. 60 ஆயிரம்  மற்றும் காரை கோவையைச் சேர்ந்த 3 பேர் திங்கள்கிழமை பறித்துச் சென்றனர்.
    மதுரை கோச்சடை பகுதியைச் சேர்ந்தவர் கணேசராஜா(34). இவர் 2 ஆண்டுகளுக்கு முன்பு கோயம்புத்தூரில் பழைய கார்களை வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார். அப்போது, பல்லடத்தைச் சேர்ந்த ரௌடி மதன் என்பவர், இவரை மிரட்டி பணம் பறித்து வந்துள்ளார். மதனுக்கு பயந்து கடந்த ஆண்டு கோயம்புத்தூரை காலி செய்து விட்டு மதுரை வந்து கார் வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார்.    இந்நிலையில், மதன் உள்ளிட்ட 3 பேர் திங்கள்கிழமை கணேசராஜா வீட்டிற்கு வந்துள்ளனர். வீட்டில் இருந்த கணேசராஜா மற்றும் குடும்பத்தினரை கத்தியைக் காட்டி மிரட்டி 4 பவுன் நகைகள், ரூ.60 ஆயிரம் ஆகியவற்றைப் பறித்து கொண்டு, கணேசராஜாவின் காரையும் எடுத்துக் கொண்டு தப்பிவிட்டனர். இதுகுறித்து கணேசராஜா அளித்த புகாரின் பேரில் எஸ்.எஸ்.காலனி போலீஸார் திங்கள்கிழமை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai