சுடச்சுட

  

  செந்தமிழ்க் கல்லூரியில் சிறப்புச் சொற்பொழிவு: சுல்தான்பூர் மாவட்ட பெண் ஆட்சியர் பங்கேற்பு

  By DIN  |   Published on : 26th June 2019 07:55 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மதுரை செந்தமிழ்க் கல்லூரியில் சுல்தான்பூர் மாவட்ட பெண் ஆட்சியர் திங்கள்கிழமை சிறப்பு சொற்பொழிவாற்றினார்.
  மதுரை நான்காம் தமிழ்ச்சங்கம் செந்தமிழ் கல்லூரியில் சிறப்புச் சொற்பொழிவு திங்கள்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தமிழ்ச் சங்கச் செயலர் மாரியப்ப முரளி தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் கி.வேணுகா வரவேற்றார். இதில், கல்லூரியில் 1978 இல் படித்த பாண்டியம்மாளின் மகளும், உத்தரப்பிரதேச மாநிலம் சுல்தான்பூர் மாவட்ட ஆட்சியருமான இந்துமதி சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசியது: பெண்கள் வாழ்க்கையில் உயர்வதற்கு பொருளாதாரம் ஒரு தடைஇல்லை. கறுப்பாக இருக்கிறோம் என்று தாழ்வு மனப்பான்மையும் தேவை இல்லை.  நாம் நமது திறமை மேல் நம்பிக்கை வைத்து இலக்கை தீர்மானித்து தொடர்ந்து செயல்பட்டு வந்தால் வெற்றி நிச்சயம் கிட்டும்.  மேலும் தற்போது சூழலில் செல்லிடப்பேசி, கணினி உள்ளிட்ட தொழில்நுட்ப சாதனங்களை மாணவ, மாணவியர் அளவோடு பயன்படுத்த வேண்டும். இதனால் நமது கவனம் திசை திரும்புவது தடுக்கப்படும் என்றார். 
  நிகழ்ச்சியில் தமிழ் மறை சரித்திரம் என்ற ஓலைச்சுவடியை தொழிலதிபர் பிரபாகரன் தமிழ்ச்சங்கத்துக்கு வழங்கினார். துணை முதல்வர் கோ.சுப்புலட்சுமி நன்றி கூறினார். நிகழ்ச்சியில் பேராசிரியர்கள், மாணவ, மாணவியர் பலர் பங்கேற்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai