சுடச்சுட

  

  மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் உண்டியல் திறப்பு:   ரூ.82.14 லட்சம் காணிக்கை வசூல்

  By DIN  |   Published on : 26th June 2019 07:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் உண்டியலில் பக்தர்கள் காணிக்கையாக  ரூ. 82.14 லட்சம் வசூலாகியுள்ளது.
  மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்,  தெப்பக்குளம் மாரியம்மன் கோயில், முக்தீஸ்வரர் கோயில், செல்லூர் திருவாப்புடையார் கோயில், திருவாதவூர் திருமறைநாதர் சுவாமி கோயில் மற்றுமுள்ள உபகோயில்களின் உண்டியல்கள் செவ்வாய்க்கிழமை திறந்து எண்ணப்பட்டன. இதில் ரூ.82,14,372,  பல மாற்று பொன் இனங்கள் 531கிராம், பல மாற்று வெள்ளி  645 கிராம், மற்றும் அமெரிக்கா, கனடா, சிங்கப்பூர், மலேசியா, இலங்கை போன்ற அயல்நாட்டு ரூபாய் நோட்டுக்கள்  320 எண்ணிக்கை வரப்பெற்றது. உண்டியல் திறப்புக்கு கோயில் இணை ஆணையர் நா.நடராசன் முன்னிலை வகித்தார். இதில்  இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர்  மு.விஜயன், கோயில் உதவி ஆணையர் ஜெ.முல்லை மற்றும் கண்காணிப்பாளர்கள், மதுரை தெற்கு, வடக்கு ஆய்வர்கள், பக்தர் பேரவையினர், ஐயப்ப சேவா சங்கத்தினர் மற்றும் கோயில் பணியாளர்கள் மற்றும் ஓய்வுபெற்ற வங்கி அலுவலர்கள் உள்பட 320 பேர் உண்டியல்கள் எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai