சுடச்சுட

    

    வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் 4 பவுன் நகை பறிப்பு

    By DIN  |   Published on : 26th June 2019 07:56 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருமங்கலம் அருகே  வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் 4 பவுன் நகையை திங்கள்கிழமை இரவு பறித்துச் சென்றவரை போலீஸார் தேடி வருகின்றனர். 
    திருமங்கலத்தை அடுத்த சிந்துபட்டியைச் சேர்ந்தவர் சமையன்(28). தையல் தொழிலாளி.  இவரது மனைவி முத்துலெட்சுமி(23). இருவரும் திங்கள்கிழமை இரவு தூங்கும்போது காற்றுக்காக வீட்டின் கதவைதிறந்து வைத்து தூங்கினார்களாம். அப்போது நள்ளிரவில் மர்ம நபர் ஒருவர் முத்துலெட்சுமி கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றுவிட்டார்.  
    இதுகுறித்த புகாரின்பேரில் சிந்துபட்டி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai