இந்து முன்னணி மண்டல பொதுக்குழுக் கூட்டம்
By DIN | Published On : 04th March 2019 07:23 AM | Last Updated : 04th March 2019 07:23 AM | அ+அ அ- |

மேலூரில் இந்து முன்னணியின் மண்டல பொதுக்குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு மாநில அமைப்பாளர் பக்தன் தலைமை வகித்தார்.
மாநில இணை அமைப்பாளர் கே.கே.பொன்னையா முன்னிலை வகித்தார். மாநிலச் செயலர் எஸ்.செந்தில்குமார் மற்றும் பலர் பொதுக்குழுவில் பங்கேற்றுப்பேசினர். இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: காஷ்மீர் மாநிலம் புல்வாமா பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளை அழிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தீவிரவாதிகளை ஒழிக்கும் அரசின் நடவடிக்கைகளை அவமதிக்கும் வகையில் கருத்துக்கூறும் சீமான், திருமுருகன் காந்தி, தியாகு போன்றவர்கள் மீது மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்து மதத்தினரை அவமதிக்கும் வகையில் ஓவியக்கண்காட்சி என்ற பெயரில் நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதை தடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பொதுக்குழுவுக்கான ஏற்பாடுகளை புறநகர் மாவட்டத் தலைவர் ராமச்சந்திரன், துணைத் தலைவர் ஏ.செந்தில்மூர்த்தி, துணைச் செயலர் ஆர்.வெங்கடேஷ் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.