கல்வி நிலையங்களில் அதிகரிக்கும் மாணவியர் மீதான பாலியல் துன்புறுத்தல்: இந்திய மாணவர் சங்கம் புகார்

கல்வி நிலையங்களில் அதிகரித்து வரும் மாணவியர் மீதான பாலியல் துன்புறுத்தலைத் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய மாணவர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. 

கல்வி நிலையங்களில் அதிகரித்து வரும் மாணவியர் மீதான பாலியல் துன்புறுத்தலைத் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய மாணவர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. 
இந்திய மாணவர் சங்க மாநில மாநாடு சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரு நாள்கள் மதுரை வில்லாபுரம் லீலாவதி அரங்கில் நடைபெற்றது. அந்த மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து இந்திய மாணவர் சங்க மாநிலச் செயலர் வீ.மாரியப்பன்  செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை  கூறியது: கல்விநிலையங்களில் மாணவியருக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் அதிகரித்துக் கொண்டு வருகிறது.  
நாட்டில் 15 நிமிடங்களுக்கு ஒரு பெண் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகிறாள் என புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. கல்வி நிலையங்களில் மாணவிகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்படவேண்டும். நாப்கின் வென்டார் இயந்திரங்களை அனைத்து கல்வி நிலையங்களிலும் அமைக்க வேண்டும். பெண் கல்விக்காக மத்திய, மாநில அரசுகள் அதிக நிதியை ஒதுக்க வேண்டும். கடந்த ஆண்டைவிட, நிகழாண்டில் பெண் கல்விக்காக ஒதுக்கப்பட்ட நிதி ரூ.164 கோடி குறைந்துள்ளது. 2018-2019 கல்வியாண்டிற்கான கல்வி உதவித்தொகை மாணவர்களுக்கு இன்னும் கொடுக்கப்படவில்லை. ஆனால் தேர்தல் வருவதையொட்டி மக்களுக்கு ரூ.2 ஆயிரம், ரூ.6 ஆயிரம் என கொடுக்கத் தொடங்கியுள்ளனர். மதுரை காமராஜர் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளில் காலியாக உள்ள முதல்வர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். முதல்வர்களை நியமிப்பதில் முறைகேடுகள் நடக்காத வண்ணம் முறையாக தேர்வு செய்யப்பட வேண்டும் என்றார்.
இம்மாநாட்டில், பாலின சமத்துவத்தை நிலை நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 
10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் மத்தியக் குழு உறுப்பினர்கள் சத்யா, ஜான்சி, மாநில செயற்குழு உறுப்பினர் காவியா, மத்திய செயற்குழு உறுப்பினர் ஷில்பா, மதுரை புறநகர் மாவட்டத் தலைவர் கா.பிருந்தா, ஆவணப்பட இயக்குநர் மாலினி சிவரத்தினம், வழக்குரைஞர் க.பாண்டீஸ்வரி உள்ளிட்ட பலர் பேசினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com