திருவாதவூரில் நாய்கள் கண்காட்சி
By DIN | Published On : 04th March 2019 07:22 AM | Last Updated : 04th March 2019 07:22 AM | அ+அ அ- |

மதுரை மாவட்டம் மேலூர் அருகே திருவாதவூர் ஆமூரில் கன்னி இன வேட்டை நாய்கள் கண்காட்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கன்னி இன வேட்டை நாய்கள் வளர்ப்போர்கள் இணையதளம் மூலம் ஒரு குழுவாக இணைத்து செயல்பட்டு வருகின்றனர். இதனைத் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக ஆமூரில் கண்காட்சி நடைபெற்றது. இதில், 100-க்கும் மேற்பட்ட நாய்கள் பங்கேற்றன. பல்வேறு ஊர்களில் இருந்து நாய்களுடன் வளர்ப்போர் வந்திருந்தனர்.
இக்கண்காட்சிக்கான ஏற்பாடுகளை கன்னி நாய் வளர்ப்போர் அமைப்பைச் சேர்ந்த பிரபு செய்திருந்தார். கண்காட்சிக்கு வந்த நாய்களை ஏராளமானோர் பார்வையிட்டனர். கன்னி நாய்கள் பாரம்பரியகுணம் கொண்டவை. இவ்வகை இன நாய்கள் அழிந்துவிடாமல் பாதுகாக்கப்படவேண்டும். வேட்டைக்குப் பயன்படும் இந் நாய் வளர்ப்போருக்கு வனத்துறையினர் நெருக்கடி கொடுக்கக் கூடாது. கால்நடைத்துறையினர் மருத்துவ உதவிகளை அளிக்க வேண்டும் என இந்த அமைப்பினர் வேண்டுகோள் விடுத்தனர்.