Enable Javscript for better performance
தமிழகத்தில் போலியோ நோய் இல்லை என்ற சாதனையை அரசு ஏற்படுத்தியுள்ளது- Dinamani

சுடச்சுட

    

    தமிழகத்தில் போலியோ நோய் இல்லை என்ற சாதனையை அரசு ஏற்படுத்தியுள்ளது

    By DIN  |   Published on : 11th March 2019 05:42 AM  |   அ+அ அ-   |    |  


    தமிழகத்தில் போலியோ நோய் இல்லை என்ற சாதனையை அரசு ஏற்படுத்தியுள்ளது என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ  தெரிவித்தார்.
    மதுரையில் போலியோ சொட்டு மருந்து முகாம் தொடக்க விழா மாட்டுத்தாவணி எம்ஜிஆர் பேருந்து நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே. ராஜூ பங்கேற்று முகாமை தொடங்கி வைத்துப் பேசியது: 
    மதுரை மாவட்டத்தில் 2 லட்சத்து 84 ஆயிரத்து 400 குழந்தைகளுக்கும், மதுரை மாநகராட்சியில் 1 லட்சத்து 45 ஆயிரத்து 985 குழந்தைகளுக்கும் சொட்டு மருந்து வழங்கப்படும். தமிழ்நாட்டில் 43 ஆயிரத்து 51 முகாம்களும்,  மதுரை மாவட்டத்தில் 1,705 முகாம்கள் , 15 நடமாடும் முகாம்கள், மதுரை மாநகராட்சியில் 462 முகாம்களும், 45 சிறப்பு மற்றும் நடமாடும் மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் பயணம் மேற்கொள்பவர்கள், இடம் பெயர்ந்து வாழும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்காகவும்,  இலங்கை அகதிகள் முகாம்கள், நரிக்குறவர் குடியிருப்புக்களிலும் முகாம் அமைக்கப்பட்டு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டை பொருத்தவரை கடந்த 14 ஆண்டுகளாக போலியோ நோய் இல்லை என்ற வரலாற்று சாதனையை தமிழக  அரசு ஏற்படுத்தி உள்ளது என்றார்.
    மதுரையில்  மாநகராட்சி நலவாழ்வு மையங்கள்,  மகப்பேறு மருத்துவமனைகள், சத்துணவு மையங்கள்,  மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலின் நான்கு கோபுர வாசல்கள், தேவாலயங்கள், மசூதிகள்,  பேருந்து நிலையங்கள்,   ரயில் நிலையங்கள், பூங்காக்கள், பள்ளிக்கூடங்கள் மற்றும் மக்கள் அதிக அளவு கூடும் இடங்களிலும் போலியோ சொட்டு மருந்து முகாம் அமைக்கப்பட்டிருந்தது. 
    நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ச.நடராஜன்,  மாநகராட்சி ஆணையர் ச.விசாகன், மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினர் ஆர்.கோபாலகிருஷ்ணன்,  வடக்கு சட்டப்பேரவைத் தொகுதி  உறுப்பினர் வி.வி.ராஜன் செல்லப்பா, துணை இயக்குநர் (சுகாதாரம்) கே.வி.அர்ஜூன்குமார்,  உதவி நகர்நல அலுவலர் சரோஜா மற்றும் உதவி ஆணையர்கள், அதிகாரிகள் பங்கேற்றனர்.
     

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    kattana sevai
    flipboard facebook twitter whatsapp