சுடச்சுட

  

  உசிலம்பட்டி அருகே  கு.நாட்டாபட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு கிராம மக்கள் வெள்ளிக்கிழமை  கல்விச் சீர்   வழங்கினர்.  
  உசிலம்பட்டி வட்டம்  செல்லம்பட்டி ஒன்றியத்திற்கு  உள்பட்ட இப்பள்ளிக்குத் தேவையான மின் விசிறி,சில்வர் டம்ளர், பீரோ, டீயூப் லைட், யூ. பி. எஸ்., இன்வெர்ட்டர் சாதனம்,  எல்.இ.டி. டிவி, டிரம், நோட்டு, புத்தகங்கள், தலைவர் படங்கள் என ரூ. 1 லட்சம் மதிப்பிலான பொருள்களை மேளதாளத்துடன் கிராம மக்கள் ஊர்வலமாக பள்ளிக்கு கொண்டு வந்தனர். 
  பின்னர் பள்ளித் தலைமை ஆசிரியர் எஸ்.முத்தையாவிடம் பொருள்களை ஒப்படைத்தனர். இந்தப்பள்ளியில் கு.நாட்டாபட்டி, சடச்சிபட்டி, சொக்கத்தேவன்பட்டி, பசுக்காரன்பட்டி, குறவகுடி, உள்ளிட்ட கிராமங்களிலிருந்து மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். தனியார் பள்ளியை மிஞ்சும் அளவிற்கு பள்ளியை சீர் படுத்தி முறையாக பயிற்றுவிப்பதாக தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களை பெற்றோர்கள் பாராட்டினர். 
  சீர் வழங்கிய பெற்றோர்கள் மற்றும் கிராம மக்களுக்கு ஆசிரியர்கள் மாணவ, மாணவிகள் நன்றி கூறினர். 
  இந்த நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் தேவஅன்புராஜ், பசும்பொன்இளங்கோ, பூங்கொடி, பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் ஞானசகுந்தலா உள்ளிட்ட கிராம மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai