சுடச்சுட

  

  கொட்டாம்பட்டி அருகே ம.வெள்ளாளப்பட்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மஞ்சு விரட்டு நிகழ்ச்சியில்  காளைகளைப் பிடிக்க முயன்ற 10-க்கு மேற்பட்ட இளைஞர்கள் காயமடைந்தனர்.
  கிராமத்தில் உள்ள ஆண்டிக்கருப்பண சுவாமி கோயில் திருவிழாவையொட்டி இந்த மஞ்சு விரட்டு நடத்தப்பட்டது. கோயில் அருகிலுள்ள தொழுவத்தில் 100-க்கு மேற்பட்ட ஜல்லிக்கட்டு காளைகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. 
  கிராமத்திலிருந்து வேஷ்டி, துண்டுகள் அடங்கிய ஜவுளி மூட்டைகளாகக் கட்டி கொண்டுவரப்பட்டு, காளைகளுக்கு விநியோகிக்கப்பட்டன. 
  இதையடுத்து காளைகள் தொழுவத்திலிருந்து வெளியில் கொண்டுவரப்பட்டு திறந்த வெளியில் அவிழ்த்துவிடப்பட்டன. 
  காளைகளைத் துரத்திப் பிடிக்க முயன்றதில் 10-க்கு மேற்பட்ட இளைஞர்கள் காயமடைந்தனர். அங்கு தயார் நிலையில் இருந்த மருத்துவக் குழுவினர் அவர்களுக்கு சிகிச்சை அளித்தனர். 
  பாதுகாப்பு பணியில் கொட்டாம்பட்டி போலீஸார் ஈடுபட்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai