சுடச்சுட

  

  ஆஸ்டின்பட்டியை அடுத்த வேடர்புளியங்குளம் பாலகுருநாதன் அங்காள பரமேஸ்வரி கோயிலில் தங்கம், பித்தளை உள்ளிட்ட ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள பொருள்களை மர்ம நபர்கள்  திருடிச்சென்றுள்ளனர்.
  இக்கோயில் பூசாரி வெள்ளிக்கிழமை காலையில் கோயிலைத் திறக்கச் சென்றபோது  பூட்டு மற்றும் பீரோ உடைக்கப்பட்டிருந்தது தெரிந்தது. உள்ளே சென்று பார்த்தபோது கோயிலில் அரை பவுன் அம்மனின் தாலி, ஐம்பொன் நகைகள், குத்துவிளக்குகள் என ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள பொருள்கள் திருடு போனது தெரியவந்தது. 
  தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் கைரேகைகளைப் பதிவு  செய்தனர். இச்சம்பவம் குறித்து ஆஸ்டின்பட்டி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். ஏற்கெனவே இதே கோயிலில் கடந்த சில மாதங்களுக்கு முன் திருடுபோன நிலையில்,  தற்போது மீண்டும் திருட்டு நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai