சுடச்சுட

  

  ஜெர்மனியில் இறகுப்பந்து போட்டி: மதுரை வீராங்கனைக்கு வெண்கலம்

  By DIN  |   Published on : 16th March 2019 07:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ஜெர்மனியில் நடைபெற்ற சர்வதேச இறகுப் பந்துப்போட்டியில் 19 வயதுக்குள்பட்டோருக்கான பிரிவில் மதுரை வீராங்கனை வெண்கலப் பதக்கம் வென்றார். 
   ஜெர்மனி நாட்டில் சர்வதேச அளவிலான இறகுப் பந்து போட்டி அண்மையில் நடைபெற்றது. இதில் பல்வேறு வெளி நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். இந்தப்போட்டியில் 19 வயதுக்குள்பட்ட பெண்கள் பிரிவில் மதுரையைச் சேர்ந்த வீராங்கனை வி.எஸ்.வர்ஷினி பங்கேற்றார். பல வீராங்கனைகள் பங்கேற்ற போட்டியில் வர்ஷினி  வெண்கலப்பதக்கம் வென்றார். இந்நிலையில் மதுரை திரும்பிய  வீராங்கனை வி.எஸ்.வர்ஷினையை மாவட்ட விளையாட்டு அலுவலர் அ.மாலதி மற்றும் இறகுப்பந்து பயிற்றுநர்கள் பழ.ராஜசேகர், சரவணன் ஆகியோர் பாராட்டினர்.
   ஜெர்மனியில் நடைபெற்ற இறகுப்பந்து போட்டியில் மதுரை வீராங்கனை பதக்கம் பெறுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai