சுடச்சுட

  


  அழகர்கோவில் மலை மீதுள்ள சோலைமலை முருகன் கோயில் உண்டியல் காணிக்கை வருமானம் ரூ. 11 லட்சத்து 67 ஆயிரம் கிடைத்துள்ளது. 
  கள்ளழகர் கோயில் நிர்வாகத்துக்குள்பட்ட சோலைமலை முருகன் கோயில் உண்டியல்கள்,  நிர்வாக அதிகாரி மாரிமுத்து, துணை அலுவலர் அனிதா ஆகியோர் முன்னிலையில் சனிக்கிழமை திறக்கப்பட்டன.
  அவை, சஷ்டி மண்டபத்துக்கு கொண்டு செல்லப்பட்டன. அங்கு  ஐயப்ப சேவா சங்கத்தினர், வங்கி ஊழியர்கள் மற்றும் கோயில் பணியாளர்கள் காணிக்கை பணத்தை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். அதில், ரூ.11 லட்சத்து 67 ஆயிரத்து 46 ரொக்கமும், தங்கம் 15 கிராமும், வெள்ளி 268 கிராமும் மற்றும் வெளிநாட்டு கரன்சி நோட்டுகளும் கிடைத்துள்ளன.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai