Enable Javscript for better performance
திருமங்கலம் அரசு மருத்துவமனையில்  பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள்- Dinamani

சுடச்சுட

    

     திருமங்கலம் அரசு மருத்துவமனையில்  பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள்

    By DIN  |   Published on : 17th March 2019 03:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


    திருமங்கலம் அரசு மருத்துவமனையில் பெண்ணுக்கு வெள்ளிக்கிழமை ஒரே பிரசவத்தில் 3 பெண் குழந்தைகள் பிறந்தன.  
    தேனி மாவட்டம், பெரியகுளம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா. இவரது மனைவி திருமங்கலம் மீனாட்சிபுரம் பகுதியைச் சேர்ந்த பாண்டிப்பிரியா (20). தலைப் பிரசவத்துக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பாண்டிப் பிரியாவுக்கு, ஒரே பிரசவத்தில் 3 பெண் குழந்தைகள் பிறந்தன.  
    இது குறித்து திருமங்கலம் அரசு மருத்துவர்கள் கூறியது: 3 பெண் குழந்தைகளும் சுகப் பிரசவமாக பிறந்தன. குழந்தைகள் மூன்றும் எடை குறைவாக இருந்ததால், மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. தற்போது தாய் மற்றும் குழந்தைகள் மூவரும், மதுரை அரசு மருத்துவமனையில் நலமுடன் உள்ளதாகத் தெரிவித்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai