தேர்தல் பணிக்குழு: கூட்டணிக் கட்சியினருடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் ஆலோசனை
By DIN | Published On : 22nd March 2019 07:39 AM | Last Updated : 22nd March 2019 07:39 AM | அ+அ அ- |

மதுரை திருப்பாலையில் கூட்டணிக் கட்சி நிர்வாகிகளுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்கேடசன் வியாழக்கிழமை தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.
திமுக கூட்டணி சார்பில் மதுரை மக்களவைத் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சு.வெங்கடேசன் போட்டியிடுகிறார். அவர் சட்டப் பேரவைத் தொகுதி வாரியாக கூட்டணிக் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தி வருகிறார். இதன்படி மதுரை கிழக்கு சட்டபேரவைத் தொகுதி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திருப்பாலையில், சட்டப்பேரவை உறுப்பினர் பி.மூர்த்தி தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. திமுக ஒன்றியச் செயலர்கள் பா.ரகுபதி, சிறைச்செல்வன், மதிமுக மாவட்டச் செயலர்கள் புதூர் மு.பூமிநாதன், எம்.மார்நாடு, காங்கிரஸ் கட்சியின் மதுரை வடக்கு மாவட்டத் தலைவர் ரவிச்சந்திரன், ஆதித் தமிழர் பேரவை மாநிலத் துணைச் செயலர் கார்த்திக், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வடக்கு மாவட்டச் செயலர் செல்வஅரசு, கிழக்கு தொகுதிச் செயலர் கார்வண்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புறநகர் மாவட்டச் செயலர் பா.காளிதாஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள் ஏ.லாசர், மதுக்கூர் ராமலிங்கம், புறநகர் மாவட்டச் செயலர் சி.ராமகிருஷ்ணன், மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.கே.பொன்னுத்தாய் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தேர்தல் பிரசாரம் மற்றும் வாக்குச் சேகரிப்பில் கூட்டணிக் கட்சிகள் இணைந்து பணியாற்றுவது குறித்து கட்சி நிர்வாகிகள் ஆலோசனைகளைத் தெரிவித்தனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...