சிறுமியை கடத்தி பாலியல் தொந்தரவு: போஸ்கோ சட்டத்தில் இளைஞர் கைது
By DIN | Published On : 24th March 2019 03:40 AM | Last Updated : 24th March 2019 03:40 AM | அ+அ அ- |

மதுரை அருகே சிறுமியை கடத்தி பாலியல் கொடுமைப்படுத்திய இளைஞர், போஸ்கோ சட்டத்தின் கீழ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார்.
மதுரை மாவட்டம், கோவில்பாப்பாகுடியைச் சேர்ந்த 17 வயது சிறுமியை கடந்த செவ்வாய்க்கிழமை முதல் காணவில்லையாம். இது குறித்து அச்சிறுமியின் தந்தை கூடல்புதூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. காவல் ஆய்வாளர் கோட்டைசாமி தலைமையில் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.
இதில், சிறுமியை கடத்திச் சென்றது கோவில்பாப்பாகுடி கிழக்குத் தெருவைச் சேர்ந்த அழகர் மகன் விஷ்ணு (24) என்பது தெரியவந்தது. அதையடுத்து, போலீஸார்சிறுமியை மீட்டனர். பின்னர், விஷ்ணு மீது போஸ்கோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீஸார், அவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிமன்ற உத்தரவின்படி, அவரை மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.