மதுரையில் துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு
By DIN | Published On : 24th March 2019 03:42 AM | Last Updated : 24th March 2019 03:42 AM | அ+அ அ- |

தேர்தலில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க, மதுரை மாநகரக் காவல் துறையினர் மற்றும் துணை ராணுவப் படையினர் கொடி அணிவகுப்பை சனிக்கிழமை நடத்தினர்.
மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 18 ஆம் தேதி நடைபெற உள்ளது. எந்தவிதத் தடையுமின்றி தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, மதுரை மாநகரத்தில் பொதுமக்கள் அனைவரும் அச்சமின்றி வாக்களிக்கவும் மற்றும் தேர்தல் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும், துணை ராணுவத்தினரும், காவல் துறையினரும் கொடி அணிவகுப்பு நடத்தினர்.
மதுரை மாநகரக் காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் உத்தரவுப்படி நடைபெற்ற கொடி அணி
வகுப்பை, மாநகரக் காவல் உதவி ஆணையர் உதயகுமார் தொடக்கி வைத்தார். நெல்பேட்டையில் தொடங்கிய இந்த அணிவகுப்பு காமராஜர் சாலை வரை நடைபெற்றது. இதில், 65 துணை ராணுவத்தினரும், 75 காவல் துறையினரும் பங்கேற்றனர்.