Enable Javscript for better performance
அமமுக வேட்பாளர் வாக்குச் சேகரிப்பு- Dinamani

சுடச்சுட

    

    அமமுக கட்சியின் மதுரை மக்களவைத் தொகுதி வேட்பாளர் கா.டேவிட் அண்ணாதுரை பள்ளிவாசல்களில் புதன்கிழமை வாக்கு சேகரித்தார்.
       சம்மட்டிபுரம் பள்ளிவாசல், மாடக்குளம் பிரதான சாலையில் உள்ள சுரேந்தர் நகர் பள்ளிவாசல்களுக்கு சென்று இஸ்லாமியர்களிடம் வாக்கு சேகரித்தார். பின்னர் பெத்தானியாபுரம், விளாங்குடி, கூடல் நகர் பள்ளி வாசல்களுக்கு சென்று ஜாமஅத் நிர்வாகிகள் மற்றும் இஸ்லாமிய மக்களை சந்தித்து தேர்தலில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். பெத்தானியாபுரம் அண்ணா பிரதான வீதியில் நடந்து சென்று வர்த்தக நிறுவனங்கள், கடைகள் மற்றும் இல்லங்களில் வாக்குகளை சேகரித்தார். அப்பகுதியில் உள்ள தேநீர் கடையில் தேநீர் பருகி அங்கு இருந்த ஆட்டோ ஓட்டுநர்களிடம் வாக்குகளை சேகரித்தார். அப்போது மாநில மகளிரணிச் செயலர் வளர்மதி ஜெபராஜ், வடக்கு மாவட்டச் செயலர் ஜெயபால், பொதுக்குழு உறுப்பினர் உமாஹூன் கபீர், எம்ஜிஆர் மன்ற மாநிலச் செயலர் பரமநாதன், சிறுபான்மையினர் அணி வடக்கு மாவட்டச் செயலர் பரக்கத் அலி, இந்திய தேசிய லீக் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai