Enable Javscript for better performance
இளைஞரிடம் கத்தி முனையில் பணம் பறிப்பு: 3 பேர் கைது- Dinamani

சுடச்சுட

    

    மதுரையில் கத்தி முனையில் இளைஞரிடம் பணம், செல்லிடப்பேசி பறித்த 3 பேரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
    தூத்துக்குடியை சேர்ந்த பொறியாளர் பிரவீன்ராஜ் (27). இவர் நண்பரின் வீட்டை புதுப்பிக்கும் பணியை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், மதுரை ஐராவதநல்லூர் கண்மாய் அருகே பிரவீன்ராஜ் நடந்து சென்ற போது 3 பேர் கொண்ட கும்பல் கத்தியைக் காட்டி  மிரட்டி, அவரிடம் இருந்த ரூ. 7,400 மற்றும் ரூ.64 ஆயிரம் மதிப்புள்ள செல்லிடப்பேசி ஆகியவற்றை பறித்துச் சென்றது. 
    இதுகுறித்து தெப்பக்குளம் காவல் நிலையத்தில் பிரவீன்ராஜ் புகார் அளித்தார். அதன்பேரில் விசாரணை நடத்திய போலீஸார், சம்பவத்தில் ஈடுபட்ட மதுரை அனுப்பானடியைச் சேர்ந்த சண்முககுரு (20), சிவக்குமார் (20), அஜீத்குமார் (20) ஆகிய 3 பேரையும் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai