Enable Javscript for better performance
உசிலை அருகே வாகனச் சோதனையில் ரு.1.58 லட்சம் பறிமுதல்- Dinamani

சுடச்சுட

    

    உசிலம்பட்டி அருகே பறக்கும்படையினர் புதன்கிழமை நடத்திய வாகனச் சோதனையில் ரூ.1.58 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
     உசிலம்பட்டி-தேனி நெடுஞ்சாலையில் உள்ள கணவாய் மலையில், உசிலம்பட்டி வட்டாட்சியர்  தமிழ்செல்வி தலைமையில், தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கேரள மாநிலம் கட்டப்பனையிலிருந்து வந்த காரை சோதனை செய்தனர். அதில் இருந்த ஜேக்கப் என்பவரிடம் இருந்து ரூ.1 லட்சத்து 58ஆயிரத்து 190-யை பறிமுதல் செய்தனர். இந்த பணத்தை, உசிலம்பட்டி ஆர்.டி.ஒ. அலுவலக கருவூலத்தில் ஒப்படைத்தனர். உரிய ஆவணங்களை ஒப்படைத்து பணத்தைப் பெற்றுக் கொள்ளலாம் என தேர்தல் அலுவலர்கள் தெரிவித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai