Enable Javscript for better performance
உறங்கான்பட்டியில் மஞ்சுவிரட்டு: 7 பேர் காயம்- Dinamani

சுடச்சுட

    

    மதுரை மாவட்டம் வெள்ளலூர் அருகேயுள்ள உறங்கான்பட்டி மந்தைக் கருப்பணசுவாமி கோயில் பங்குனித் திருவிழாவையொட்டி புதன்கிழமை நடைபெற்ற மஞ்சுவிரட்டில் 7 பேர் காயடைந்தனர்.
    இந்த விழாவில் பங்கேற்க  மதுரை, சிவகங்கை மாவட்டங்களின் பல்வேறு இடங்களில் இருந்தும் ஜல்லிக்கட்டு காளைகள் வாகனங்களில் அழைத்து வரப்பட்டன. மந்தைக் கருப்பணசுவாமி கோயில் அருகேயுள்ள தொழுவில் நிறுத்தி வைக்கப்பட்ட, காளைகளுக்கு வேஷ்டி, துண்டுகள் வழங்கப்பட்டன. 
    இதையடுத்து காளைகள் தொழுவிலிருந்து திறந்து விடப்பட்டன.  வயல்வெளியில் ஓடிய காளைகளை இளைஞர்கள் ஆங்காங்கே விரட்டிப் பிடிக்க முயன்றனர். இதில் 7 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai