Enable Javscript for better performance
என்.எஸ்.வி.சித்தனிடம் ஆதரவு திரட்டிய காங்கிரஸ் வேட்பாளர்- Dinamani

சுடச்சுட

    

    என்.எஸ்.வி.சித்தனிடம் ஆதரவு திரட்டிய காங்கிரஸ் வேட்பாளர்

    By DIN  |   Published on : 28th March 2019 08:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருமங்கலத்தில்  தமாகாவின் ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர்  என்.எஸ்.வி.சித்தனிடம் விருதுநகர்  காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ப.மாணிக்கம்தாகூர் புதன்கிழமை ஆதரவு திரட்டினார்.  
    விருதுநகர் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக ப.மாணிக்கம் தாகூர் போட்டியிடுகிறார். இவர் திருமங்கலத்தில்  உள்ள காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மூத்த உறுப்பினரும், தமாகாவின் ஒழுங்கு நடவடிக்கை குழுத் தலைவருமான என்.எஸ்.வி.சித்தனை அவரது இல்லத்தில் சந்தித்து புதன்கிழமை ஆதரவு திரட்டினார். 
    தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி அதிமுகவுடன் கூட்டணியில் உள்ள நிலையில், அக்கட்சியின் உறுப்பினரை காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சந்தித்தது அரசியல் கட்சியினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai