Enable Javscript for better performance
சுப்பிரமணியபுரம், தத்தனேரி பகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூ., வேட்பாளர் வாக்குச் சேகரிப்பு- Dinamani

சுடச்சுட

    

    சுப்பிரமணியபுரம், தத்தனேரி பகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூ., வேட்பாளர் வாக்குச் சேகரிப்பு

    By DIN  |   Published on : 28th March 2019 08:03 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மதுரை மக்களவைத் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசன் மூன்றாவது நாளாக மதுரை சுப்பிரமணியபுரம், தத்தனேரி பகுதிகளில் புதன்கிழமை வாக்கு சேகரித்தார்.
    மதுரை மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசன் மூன்றாவது நாளாக ஆண்டாள்புரத்தில் வாக்குச் சேகரிப்பை தொடங்கினார். பழையகாலனி, நந்தவனம், சுந்தர்ராஜபுரம், டிபிகே சாலை, சுப்பிரமணியபுரம் ரயில்வே கேட் ஆகிய இடங்களில் பொதுமக்கள், வர்த்தக நிறுவனங்கள், குடியிருப்பு பகுதிகளில் வாக்கு சேகரித்தார்.
    மாலையில் ஆலவாய் நகரில் பிரசாரத்தை தொடங்கி, நேரு நகர், மீனாட்சி நகர், அன்னை தெரசா தெரு, அண்ணா நகர், செங்கோல் நகர், சிஏஎஸ் காலனி, திருவள்ளுவர் தெரு, கொன்னவாயன் சாலை, ஆலமரம், சிங்கம்பிடாரி கோவில் தெரு, அய்யப்பன் காலனி, இந்திரா நகர், கண்மாய்கரை, மருதுபாண்டியர் தெரு, கீழ வைத்தியநாதபுரம், நேரு வீதி, களத்துப்பொட்டல், அருள்தாஸ்புரம் தண்ணீர் தொட்டி, பெரியசாமி நகர், அசோக் நகர், பாக்கியநாதபுரம், கணேசபுரம், கைலாசபுரம், பாரதிநகர், தத்தனேரி பள்ளிவாசல் உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தது இரவு தத்தனேரி மந்தை திடலில் வாக்கு சேகரிப்பை நிறைவு செய்தார். மதுரை மத்திய தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், மதிமுகவைச் சேர்ந்த சேகரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயற்குழு உறுப்பினர் எஸ்.நூர்முகமது, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கருப்பையா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சரவணன் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் உடனிருந்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai